Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
ஓயாத உழைப்பாளி 'சட்டு' சாதனையுடன் மறைந்தார்..

Kuttan the Galle Face Hotel man - ஓயாத உழைப்பாளி 'சட்டு' சாதனையுடன் மறைந்தார்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

600 Views
இலங்கையின் தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் அமைந்துள்ள  GALLE FACE HOTEL  பற்றி அறியாதவர்கள் இலங்கையில் மிகக் குறைவானவர்களே இருப்பர் என நம்பலாம். ஆனால் இந்த ஹோட்டலில்  பணியாற்றிய உலகப்புகழ்பெற்ற பணியாளர், நுழைவாயிற்காப்பாளரான "கொட்டாரப்பட்டு சட்டு" எனப்படும் குட்டனை GALLE FACE HOTEL க்கு செல்லும் அநேகமானோருக்கு  காணமுடிந்திருந்தாலும் அவர் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

                                                   உலகிலுள்ள ஒவ்வொரு ஹோட்டலுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும் படியான ஏதாவதொரு சிறப்பான விஷயம் இருக்கும். GALLE FACE HOTEL உம் அப்படியே தான். இங்கே பெரியதொரு மீசை வைத்த பெரியவர் ஒருவர் பிரதான வாயிற்காப்பாளராக இருப்பார். 'சட்டு'  என்ற அந்தப்பெரியவர்தான் இந்தக் ஹோட்டலின் சிறப்பே...... 
 
                                       கேரளா மாநிலத்தின் கொட்டாரப்பட்டு ஊரில் 1920-ம் ஆண்டு பிறந்த குட்டன் இளமைக் காலத்திலேயே இலங்கையின் தலைமன்னார் வந்ததாகவும், பின்னர் 1938-ம் ஆண்டு அங்கிருந்து கொழும்பிற்கு வந்து பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்திருந்திருந்தார். அதன்பின் GALEFACE HOTEL இல் உபசரிப்பாளராக இணைந்து கொண்டார். முதலில் உதவியாளராக பணியில் இணைந்த அவர் பின்பு சமையலறை ஊழியராக பிரபலமடைந்திருந்தாராம். அதனைத் தொடர்ந்து நுழைவாயில் காப்பாளராகத் தன் வேலையைத் தொடர்ந்த குட்டன் 72 வருடங்கள் செவ்வனே பணி செய்து, 94 வயதில் இப்போது பணியிலிருந்தும், உலகியல் வாழ்விலிருந்தும் நிரந்தர ஓய்வெடுத்து மீளாத்துயில் கொண்டார்.



              உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் சாதனைப் பதிவுகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களும் இவரை வந்து சந்தித்ததுடன் உலகிலேயே, பணியாற்றிகொண்டிருக்கும்  வயதில் மூத்த ஹோட்டல் பணியாளர் என்ற பெருமையை பெற்றவர் இந்த 'சட்டு' என்ற குட்டன். 

                                      பணியில் சேர்ந்ததிலிருந்து நீண்டகாலம் ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்ற புகழையும் உலகின் பிரபலமான ஹோட்டல் ஊழியர் எனும் பெருமையையும் கூட தன்வசமாக்கியவர். இவ்வாறு கடமை தவறாக்கண்ணியவானாக வாழ்ந்த குட்டன் தன் வாழ்க்கைக்கோர் அர்த்தம் கொடுத்துச் சென்றுள்ளார் என்றால் மிகையில்லை.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top