மீண்டும் சிக்கலில் இளையதளபதி விஜய்...? தான் நடித்த படம் ஒன்று வெளியாகுவதிலிருந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும்வரை சர்ச்சைகளுக்கு மிச்சம் வைக்காத ஒரு நாயகன் என்றால் நம்ம 'இளையதளபதி'யை மிஞ்ச தமிழ்த் திரையுலகில் யாருமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் விஜய்.
இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றநிலையில், அரசியலுக்கு வரும் ஆசையில் அதற்கான தனது நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறாராம் விஜய். அதனால் தனது தனிப்பட்ட வேலைகளை மட்டும் கவனிப்பதோடு நிறுத்தி விடாமல், "மக்கள் இயக்கம்" என்ற பெயரில் தான் ஆரம்பித்த அறக்கட்டளை மூலம் வறுமைப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குவதோடு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவிகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறாராம்.
இவ்வாறு உதவிகளை வழங்கும் இளையதளபதிக்கு தற்போது அதுவே பெரும் தலைவலியைக் கொண்டுவந்திருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அண்மையில் "ஹுட்ஹுட்" புயல் ஆந்திர மாநிலத்தை தாக்கி அழிவை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே. இதனால் அந்தமாநில மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கு நம்ம இளையதளபதி விஜய்யும் 5லட்சம் நிதியுதவி செய்திருந்தாராம். எத்தனையோ நடிகர்கள் நன்கொடையாக நிதி வழங்கியிருந்ததோடு அவற்றை அமைதியாக செய்துள்ள நிலையில், விஜய் செய்த உதவி பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயம் வெளிவந்த நிலையில், கத்தி திரைப்படத்தில் "லைக்கா" நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து தமிழ்மக்களின் வெறுப்பை சம்பாதித்ததோடு நிறுத்தாமல், தற்போது தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் வறுமையில் வாட அவர்களை விட்டுவிட்டு இன்னொரு மாநிலத்தில் தன் பெருந்தன்மையைக் காட்டி மக்களிடம் புகழ்தேடுகின்றார் விஜய் என ஒருசாராரிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம்.
ஆனால் விஜய்க்கு ஆதரவான மனநிலையில் உள்ளவர்களோ, தன் மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அயல்மாநில மக்களுக்கும் உதவுகின்ற பெரிய மனதுடையவர் என்றும், உயர்ந்த எண்ணம் கொண்டவர் எங்கள் இளையதளபதி என்று புகழ்கின்றார்களாம்.
உங்கள் உள்ளக்கிடக்கையை யார் தான் உணர்வாரோ இளையதளபதி.............?
எல்லாம் உங்களுக்கே வெளிச்சம்.
*கணேசமூர்த்தி ராகவன்.