சூப்பர் ஸ்டாரின் லிங்கா படம் முடிவடைந்துள்ள நிலையில், அப்படம் எப்போது வெளியாகும் என நாட்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். இது இப்படியிருக்க ரஜினியின் அடுத்த படம் தொடர்பில் சில தகவல்கள் சினி வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ளது.
ம்ம்ம்ம்ம் எங்களைப் போலவே நீங்களும் இது தொடர்பில் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பது தெரிகிறது.
லிங்கா முடிந்ததும், தனது அடுத்த படத்தையும் K.S.ரவிகுமார் தான் இயக்குவார் என ரஜினி கூறியதாக சில தகவல்கள் உலாவந்த நிலையில், இப்போது சூப்பர் ஸ்டாரின் அடுத்தப் படம் ஷங்கர் கையில் எனும் செய்தி உலா வருகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இரு வேடங்கள் என்பது மட்டும் தான் இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஏனைய பணியாளர்கள் பற்றி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் இப்புதிய படத்திற்கு அதிக காலம் செலவழியாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் லிங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும் போது படங்கள் வெளியாவதற்கு அதிக காலம் செல்வதை நான் விரும்பவில்லை என்று கூறினார். இந்த மேடையில் ஷங்கரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இணைந்து பணியாற்றிய சிவாஜி வெளியாக 2 வருடங்களும், எந்திரன் வெளியாக இரண்டரை வருடங்களும் எடுத்தது அனைவரும் அறிந்ததே.
எது எப்படியிருந்தாலும் ஷங்கர் - ரஜினி இணையும் அடுத்த படம் விரைவில் வரும் எனவும் உறுதிப்படுத்திய தகவல்கள் வெகுவிரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ர. பிரவீனா