கோடம்பாக்கத்தில் குட்டிக் குஷ்பு என உலாவும் ஒருவர்தான் கொழுக் மொளுக் ஹன்சிகா. வந்த வேகத்தில் அத்தனை நடிகர்களின் ஜோடியாகவும் கலந்து கட்டி வெளுத்து வாங்கி வருகிறார்.
ஏனோ, எல்லோருக்கும் பார்த்தவுடன் பிடித்துப் போகும் பால்முகம் அம்மணிக்கு!
கிளுகிளுப்பாகவும் சரி, நடிக்கக் கூடிய நல்ல பாத்திரமானாலும் சரி, அத்தனையும் தன திறமையைக் காட்டும் தங்க மனசு ஹன்சிகாவுக்கு என்றுதான் சொஇல்ல உள்ளது. அந்தளவுக்கு கோடம்பாக்கமே கொண்டாடும் நடிகை என்று இவர் புகழ் உச்சமடைந்து விட்டது.
சரி, விசயத்துக்கு வந்திடலாம்.
இந்த குட்டி குஷ்பு இப்பொழுதெல்லாம் தன்னோடு இணைந்து நடிக்கும் இளைய தளபதி விஜய் பற்றி ஏகத்துக்கும் புகழ் பாடி புலம்புகிறார் என்று, அருகில் வசிக்கும் அம்மணிகள் அலற ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது, ''புலி படத்தில் விஜய் என்னை ஹன்சு .. ஹன்சு என்று தான் கூப்பிட்டு வந்தாரு, இப்போ அதை விட்டு, பிரின்சஸ் பிரின்சஸ் என்றுதான் கூப்பிடுறார். அந்தளவுக்கு அவருக்கு என்னை பிடிச்சிருக்கிறது ரொம்ப பெருமையாக இருக்குங்க...'' ஹன்சிகா பெருமையாக இப்படி வெளிப்படையாக பேசிவருவது பலருக்கு பற்றியெரிகிறது.
#இப்பிடியே போனால்...

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-