எங்கள் அண்ணாவில் அழகுப் புயலாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நமீதா, இப்பொழுது கொஞ்சம் கிலோக்கள் அதிகரித்திருக்கிறார். பல காலமாக சினிமாவில் வாய்ப்புக்கள் இல்லாததால் கிடைக்கும் கடை திறப்பு விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலை காட்டி வருகிறார்.
இவ்வாறு வாய்ப்புகளுக்காக வளைய வரும் நமீயை, சிலர் வேண்டுமென்று கடுப்பேற்றி வருவதாக கூறியுள்ளார்.
அதாவது, சமீபத்தில் நமீதாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்று புரளிக் குண்டு ஒன்றை பரப்பி விட்டார்கள். இதனால், கோபத்தில் கொதித்து எழுந்துள்ளது இந்த அழகு மலை.
''எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இன்னும் சில காலங்களுக்கு இல்லை. எதுக்காக, என்னோட திருமணத்தைப் பற்றி நீங்க முடிவு செய்றீங்க? தப்பான செய்திகளை பரப்பாதீங்க. இன்னும் மக்களுக்காக மக்கள் பனி செய்ய கடமை எனக்கு இருக்கு. அதற்க்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..'' என்று முடித்துள்ளார் நமீதா.
இவர் போற போக்கைப் பார்த்தால், குஷ்பு போல அரசியலிலும் குதிக்கப் போகிறார் என்பது புரிகிறது.
என்னமோ... மச்சான்ஸ் பலருக்கு ஆப்பு ரெடி!!
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-