இந்தியாவின் உலக கிண்ண தோல்விக்கு சர்மா காரணமா?முன்னாள் தலைவர் கங்குலி பதில்.உலக கிண்ணத்தின் முக்கிய அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி உலக கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.
நேற்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 1 ஓட்டத்தை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார். அவர் மோசமாக விளையாடியதற்கு அவரது காதலி அனுஷ்கா சர்மாதான் காரணம் என கூறுபவர்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் சவ்ரவ் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர்களை முதிர்ச்சியடையாத மனநிலை உடையவர்கள் எனவும் கங்குலி கூறியுள்ளார்.
அனுஷ்கா சர்மா என்ன தவறு செய் தார்? கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்க மட்டுமே அவர் சிட்னி சென்றார். விராட் கோஹ்லியின் ஆட்டமிழப்புக்கு அனுஷ்கா மீது பழி சுமத்துவது ஏற்க முடியாத குற்றச்சாட்டு என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
கோஹ்லியின் ஆட்டமிழப்பை அனுஷ்கா சர்மாவோடு தொடர்பு படுத்துவதை நிறுத்தவேண்டும் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.