நம்ம தமிழ் சினிமாவில், கோழி முட்டை கன்னழகியாய் நம் அனைவரையும் இரசிக்க வைத்துள்ளவர் நடிகை பிந்து மாதவி. அவருக்கென்று நிறைய இரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார். நல்ல நடிப்பும் ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் கொண்டவர் பிந்து மாதவி.
இவர், வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் ‘கலக்குற மாப்ளே’, ‘சவாலே சமாளி’ என பல படங்களில் நடித்து வருகிறார். அத்தோடு அஜித்தின் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், பிந்து மாதவிக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்கையில், அடிபட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கதை பரவ, அனைவரும் அதற்காக அனைவரும் வேண்டுதல்களை சொல்லி பதிவுகளை இட ஆரம்பித்துள்ளார்கள். இதனால், கடுப்பான பிந்து மாதவி, அய்யா சாமிகளே, என்னை அவ்வளவு சீக்கிரத்தில சாகடிச்சிட்டாதீங்க.. எனக்கு ஒன்னும் ஆகலை. நான் நல்லாத்தான் இருக்கிறன்.தயவு செய்து இப்போவே சாவடிச்சிடாதீங்க என்று கூறியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-