நம்ம விக்ரம் நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும்
சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வரும் சமந்தா கிராமத்து நேபாளியாக ஒரு தோற்றத்தில் நடித்து வருகிறாராம், இதற்காக நேபாளிய உடை அணிந்து அண்மையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார் சமந்தாவுக்கு இரட்டை வேடம் வழங்கி உள்ளார் இயக்குனர். இந்த படமானது நெடுஞ்சாலை பயணத்தை மையமாக வைத்து படமாக்கப்படுவதோடு இந்தியாவின் மிக முக்கிய மான இடத்திலும் நேபாளத்தில் பிரபலயமான இடங்களிலும் இப்போது படப்பிடிப்புகள் இடம்பெற்று வருகின்றன. முக்கிய சண்டை காட்சிகளும் நேபாளத்தில் வைத்து எடுக்க உள்ளனர்.சமந்தாவுக்கு பெரும் வரவேற்ப்பை கொடுக்க இருக்கும் இந்த திரைப்படம், ஐ படத்தின் பின்னர் விக்ரம் ஓய்வின்றி இந்த திரை படத்தில் நடித்து வருகிறார்.
Samantha