இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதை உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் பெற்றார் என்ற பெருமை நிலையில், இந்த படம் மற்றொரு பெருமையையும் தற்போது பெற்றுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனன் மனைவியும், விலங்குகள் நல காப்பாளரும், பிரபல நடிகையுமான அமலா, சமீபத்தில் 'சைவம்' படத்தை பார்க்குமாறு மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு பரிந்துரை செய்துள்ளார். அமைச்சர் மேனகா காந்தியும் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை பெரிதும் பாராட்டியதோடு, இந்த படத்தை பார்க்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் பரிந்துரை செய்துள்ளார்.
எனவே விரைவில் ஏற்பாடு செய்யவிருக்கும் சிறப்பு காட்சி ஒன்றில் பிரதமர் மோடி இந்த படத்தை பார்க்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. நாசர், பேபி சாரா, சண்முகராஜன், சுரேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் என்பதோடு இயக்குனர் விஜய் படத்தை இயக்கியுள்ளார் என்பதும் முக்கியமானது.
-கோடம்பாக்கக் குருவி-