என்னது? நம்ம இளைய தளபதி விஜய் திருநங்கையா? அடடா... அப்பிடி எல்லாம் அவரு நடிக்க மாட்டாரே? நம்பலாமா? விடலாமா? இப்படி ஆயிரம் கேள்விக்குறிகள் வந்து உங்கள் மனதையும் பிராண்ட ஆரம்பித்திருக்கும். இதனால் தான், பதறாமல் கீழே உள்ள செய்திகளையும் வாசிங்கன்னு சொல்றோம்.
என்னமோ நடக்குது படத்தை அடுத்து இயக்குனர் ராஜபாண்டி மற்றும் நடிகர் விஜய் வசந்த் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் அச்சமின்றி. இந்த படத்தில் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக வெளிவந்த செய்தி இப்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்க்கு பதில் வழங்கியுள்ள இயக்குனர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு முதலில் சிகண்டி என்ற மகாபாரதத்தில் வரும் கேரக்டரின் பெயரை டைட்டிலாக வைத்திருந்ததாகவும், சிகண்டி என்ற கதாபாத்திரம் மகாபாரத போரில் பீஷ்மரை பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்திருந்ததை போல, இந்த படத்தின் ஹீரோ தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற சரியான நேரத்திற்காக காத்திருப்பதால் இந்த தலைப்பை முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் விசமிகள் சிகண்டி பாத்திரம், மகாபாரதத்தில் திருநங்கையாக இருப்பதால் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
உண்மையில் விஜய் வசந்த் திருநங்கை பாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் நாயகனாகவும் நல்ல பாத்திரத்திலே தான் நடிக்கிறார் என்றும் இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-