அஜித்தின் தங்கை யார் ?
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் சிறுத்தை சிவாவோடு இணைகிறார் ,சிவா அஜித்தின் வீரம் படத்தை இயக்கியவர் என்பது தெரிந்த செய்தி.
பெயர் இடப்படாத இந்த படத்தின் கதை பலமான தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது கசிந்த செய்தி.படத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில்
அஜித்துக்கு இப்போது தங்கையை தேடிக்கொண்டிருக்கிறார்கள் .
பிந்து மாதவி ,ஸ்ரீ திவ்யா,நித்யாமேனன் ஆகியோருடன் பேசப்பட்டு கைகூடாத நிலையில் இப்போது லட்சுமி மேனனிடம் பேசப்படுவதாக கூறப்படுகிறது ஆக இன்னும் சில தினங்களில் அஜித்துக்கு தங்கயைகண்டுபிடித்துவிடுவார்கள் போல ??
*கந்தப்பன் பிரஷாந்த்