4,948 Views
மீடியாக்களிடம் ஒட்டாமல் ஒதுங்கியே இருப்பார் மணிரத்னம்.
இது பற்றி அவர் சொல்லும் போது “நான் பேசுவதைவிட என் படைப்பு பேச வேண்டும்” என்று பதில் சொன்னார் மணிரத்னம்.
அலைபாயுதே படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய படங்கள் வணிக வெற்றியைப்பெறவில்லை.
குறிப்பாக, ராவணன், கடல் படு தோல்விப்படங்கள்.
வரிசையாக தோல்விப்படங்களைக் கொடுத்ததினால் மணிரத்னத்தைக் கழுவி ஊற்றாத ஆளே இல்லை.
குறிப்பாக ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சகட்டுமேனிக்கு நக்கல் அடிக்கப்பட்டார்.
மற்ற இயக்குநராக இருந்தால் டென்ஷனில் மண்டையே வெடித்திருக்கும். மணிரத்னமோ தன் மீது சொல்லப்பட்ட விமர்சனத்தைப் பற்றி எல்லாம் கவலையேப்படாமல் தன் அடுத்தப் பட வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
நல்ல பலன் கிடைத்திருக்கிறது. 17 ஆம் திகதி வெளியான ஓ காதல் கண்மணி படத்துக்கு தமிழகம் முழுக்க மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே இதுதான் நிலவரம்.
அமெரிக்காவில் பல தியேட்டர்களில் ஓ காதல் கண்மணி வெளியிடப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய ஓப்பனிங்குடன் துவங்கிய ஓ காதல் கண்மணி படத்தை அமெரிக்க ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஓ காதல் கண்மணி படத்தை அமெரிக்காவில் வெளியிட்டிருக்கும் பிரைம் மீடியா என்ற நிறுவனம், தங்களின் கேரியரிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஓ காதல் கண்மணி படம்தான் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறது.
=== CASTRO RAHUL ===