27,524 Views
பல வருடங்களுக்கு முன் தன் பிறந்தநாளில் இலவச தையல்மிஷின்களை வழங்கினார் விஜயகாந்த்.அதன் அர்த்தம் இன்று அனைவரும் அறிந்ததே…!
சினிமாக்காரர்களின் அசைவுக்கே அர்த்தம் இருக்கும்போது, சினிமாவில் அவர்கள் பேசுகிற வசனத்துக்கு இன்னொரு அர்த்தம் இல்லாமல் இருக்குமா?
அண்ணாமலை படத்தில் வினுசக்ரவர்த்தியைப் பார்த்து ரஜினி பேசிய அரசியல் வசனங்கள் யாருக்கானது என்பதை எல்லாம் பார்த்திருக்கிறோமே…
விஷயத்துக்குப் போவோம்..!
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா – 2 சுமார் 20 கோடிகள் வரை வசூல் செய்து பேய் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ராகவா லாரன்ஸ், ”நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்” என்று வசனம் பேசுகிறார்.
காஞ்சனா-2 படத்தின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்த வசனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்த வசனம் திரும்ப திரும்ப ஒலிக்கிறது.
மாஸ் என்ற பெயரில் சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் மே 15 அன்று வெளி வர உள்ளது.இந்த நேரத்தில், ”நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்” என்று ராகவா லாரன்ஸ் வசனம் பேசி இருப்பதற்கு பின்னணி காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.
சூர்யாவைப் போலவே ராகவலா லாரன்ஸும் ட்ரஸ்ட் நடத்தி வருகிறார்.பல ஹீரோக்களிடம் நன்கொடை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் லாரன்ஸ்.
ஒருவேளை, சூர்யாவிடம் நன்கொடை கேட்டு அவர் கொடுக்க மறுத்ததால் அவரை தாக்குவது போல் காஞ்சனா-2 படத்தில் இப்படி வசனம் வைத்தாரா என்று தெரியவில்லை.
=== CASTRO RAHUL ===