இந்தியாவின் தேச பிதாவாக மகாத்மா காந்தி இருக்கலாம்.
ஆனால், இனிமேலும் இந்தியாவின் தந்தை யார் எனக் கேட்டால் எல்லோருடைய பதிலாகவும் ஜொன்டி ரோட்ஸ் என்பதே இருக்கப்போகிறது.
ஆமாம், தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜொன்டி ரோட்ஸ் இப்போது மும்பாய் இந்தியன்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ரோட்ஸ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே இயற்கை மருத்துவ முறையான நீர்ப் பிரசவம் மூலமாகக் கிடைத்துள்ள இந்தப் பெண் குழந்தைக்கு 'இந்தியா'எனப் பெயரிட்டு மகிழ்ந்துள்ளார் ரோட்ஸ்.
இந்தியா அவருக்கு தொடர்ந்து IPL மூலமாக வழங்கியுள்ள வாய்ப்பும் இந்தியாவின் விருந்தோம்பலுமே இந்த பெயரிடலுக்கான காரணம் என்று கருதப்படுகிறது.