தல அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக வந்தவர் நடிகை பார்வதி நாயர். மிரட்டலான நடிப்பை படத்தில் கொட்டியிருந்தார்.
இந்நிலையில், தனது வீட்டில் என்னை அறிந்தால் திரைப்பட படப்பிடிப்பின் போது, அஜித் தன்னை க்ளிக் செய்த புகைப்படங்கள் அத்தனையையும் வாங்கி பெரிய அளவில் பிரேம் செய்து, தனது வீடு முழுவதும் நிறைத்துள்ளார் அம்மணி.
இது மட்டுமில்லாமல், அஜித்தில் நடிப்பு பற்றி, குணாதிசயங்கள் பற்றி, தன்சகாக்களிடமும் புகழ்ந்து பெருமை பேசி வருகிறார் பார்வதி.
-கோடம்பாக்கக் குருவி-