பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியரின் மகனும் நடிகரும் ஆன சாந்தனுவுக்கு விரைவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தையான பாக்கியராஜ் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட மற்றும் நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் தொகுப்பாளினி கீத்திதான் சாந்தனுவுக்கு மணப் பெண்ணாகிறார் .
பத்திரிகையாளர் நண்பர்களுக்கு பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்,
ஒரு இனிய நற்செய்தி ’எங்க வீட்ல விசேஷங்க’ ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் பெண் சரண்யா சற்று தாமதித்து திருமணம் செய்துகொள்கிறேன் என்றதால் வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்க உள்ளது.
பெண்ணின் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தியே மணப்பெண். ஆகஸ்ட் 21ம் நாள் கோவிலில் திருமணமும் 22ம் நாள் மாலை வானகர ஸ்ரீவரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
விரைவில் அழைப்பிதழுடன் அனைவரையும் அழைக்க உள்ளேன். தங்களது அனைவரின் நல்லாசியுடனும் எங்களது திரைப்பயணம் இனிதே தொடர்கிறது. அதற்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி எங்களது பிள்ளைகளுக்கும் அந்த நல்லாசியைத் தந்தருள வேண்டுகிறோம்
இவ்வாறு இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ் தனது மகனின் திருமண அறிவித்தலை அனைவருக்கும் அறிவித்துள்ளார். விரைவில் சாந்தனுவுக்கும் கீகீ கீர்த்திக்கும் டும் டும் டும் தான்!!
-கோடம்பாக்கக் குருவி-