Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
10
நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் யுவதிகளுக்கு நடந்தது என்ன?

norwood garment gase - நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் யுவதிகளுக்கு நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,845 Views
ஹட்டன் நோர்வூட் பகுதியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் யுவதிகள் திடீரென பேய் பிடித்தது போன்று அசைவுகளை காண்பித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திடீர் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 200இற்கும் மேற்பட்டவர்கள் மயக்கமுற்ற நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்கையின் போது அவர்களுக்கு சுவாச தடை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் காற்றோற்றம் அற்றநிலையில் யுவதிகள் தொழில் புரிந்து வந்தமையினாலேயே சுவாசத்தடை ஏற்பட்டு மயக்கமுற்றனர் என கருதி தொழிற்சாலை புனரமைக்கப்பட்டு காற்றோற்றத்திற்குற்பட்ட தொழிற்சாலையாக மாற்றப்பட்டது.

எனினும் சுகயீனமுற்று சிகிச்சைப்பெற்று நேற்றைய தினம் மீண்டும் பணிக்கு திரும்பிய யுவதிகள் வேலை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக்கொள்வதும் கழுத்து பகுதியினை இறுக்கி பிடிப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி கூக்குரலில் அலறிக் கத்துவதும், கூச்சலிட்டு புன்னகைப்பதுமான செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பணிப்புரியும் 20 யுவதிகள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டமையினால் பயம் கொண்ட அனைவரும் தொழற்சாலையிலிருந்து வெளியேறியதோடு கூச்சலிட்டவர்கள் மாத்திரம் தொழிற்சாலையிலிருந்து வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அனைவரும் வெளியேறிய பின்னர் கூச்சலிட்டவர்கள் தொழிற்சாலை முழுவதும் ஓடித்திருந்து தனது விருப்பதிற்கு சத்தமிட்டு கதைப்பதும், காற்றிடைவெளியில் சைகையில் உரையாடுவதும் புன்னகைப்பதுமாக செயற்பட்டுள்ளனர்.

யுவதிகளின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த முடியாமல் காவற்துறைக்கு அறிவித்த பின்னர் யுவதிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யுவதிகளை சிகிச்சைக்குட்படுத்திய வைத்தியர்கள் பின்னர் யுவதிகள் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர்.

இதன்பின்னர், யுவதிகளை மனநல வைத்தியர்களிடம் சிகிச்சைக்குட்படுத்த தீர்மானிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top