divulupituya school case - அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள 4 மாணவிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,037 Views
அதிபரை அவமதிக்கும் விதமாக தாம் அழைத்ததாக கூறி, அவர் தம்மை தாக்கியதாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெனியாய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள், சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனையின் விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி குறித்த பாடசாலையின் 4 மாணவிகளும், ஒரு மாணவரும் இவ்வாறு அதிபரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடசாலையின் பேருந்தில் பயணித்த போது, அதிபரை அவமதிக்கும் விதமாக குறித்த மாணவர்கள் அழைத்தாக அப்பாடசாலையின் ஆசிரியை ஒருவர் அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இதன் பின்னரே அதிபர் அம்மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.