3,502 Views
'கிம்' என செல்லமாக அழைக்கப்படும் அவரும் , அவரது குடும்ப உறுப்பினர்களும் தொலைக்காட்சி பிரபலங்கள் .
இந்நிலையில் 'கிம்' இன் மாற்றாந்தந்தை திடுக்கிடும் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவரும், ரியாலிட்டி தொலைக்காட்சி பிரபலமுமான புரூஸ் ஜென்னெர் தான் ஒரு திருநங்கை எனவும் , தன்னை பெண்ணாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் சிறுவயதில் இருந்தே இதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள புரூஸ் 3 முறை திருமணமானவர் என்பதுடன் 6 பிள்ளைகளுக்கு தந்தையும் ஆவார்.
தற்போது பெண்ணாக மாறுவதற்கு தன்னை முழுதாக தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், இவ்வளவு வருடமும் தான் முகங்கொடுத்த உளவியல் ரீதியான போராட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.