Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கம் எதிர்வு கூறப்பட்டதா?

Was Nepal earthquake predicted? - நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கம் எதிர்வு கூறப்பட்டதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,546 Views
நேபாளம், இந்தியா உட்பட இமயமலைப் பகுதியில் நில அதிர்வு ஏற்படுமென முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இமயமலை சிகரத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்று புவியியல் நிபுணர்கள் முன்கூட்டியே எச்சரித்துள்ளனர்.  உலகின் பல்வேறு இடங்களில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றி புவியியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மேலும் எங்கெங்கு பூகம்பம் வரும் வாய்ப்பு உள்ளது என்பது பற்றியும் ஆய்வு நடத்தி எச்சரித்து வருகிறார்கள்.

காஷ்மீர் முதல் அசாம் வரை பரந்து விரிந்து கிடக்கும் இமயமலை தொடர்களில் நிலநடுக்க அபாயம் குறித்து புவியியல் வல்லுனர்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் இந்திய பகுதியில் உள்ள கண்ட திட்டுகளும், திபெத் பகுதியில் உள்ள கண்ட திட்டுகளும் நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும், அவ்வாறு நகரும் போது பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதே போல் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் புவியியல் பேராசிரியர் சி.பி. ராஜேந்திரன், குசாலா ராஜேந்திரன் மற்றும் தேசிய பாறையியல் நிபுணர் பிஜூஜான் ஆகியோர் கொண்ட குழு இமயமலையில் நிலநடுக்கம் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. இக்குழுவினர் வட இந்தியா, நேபாள பகுதிகளில் கடுமையான நில நடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே போல அமெரிக்கா, ஐரோப்பா நிபுணர்களும் நேபாளத்தில் நில நடுக்கம் வரும் என எச்சரித்தனர். ஆனால் எப்போது ஏற்படும் என யாராலும் கணித்து சொல்ல முடியாது. எனவே முன்னெச்சரிக்கையாக பலமான கட்டிடங்கள் கட்டி குடியேறுவது, பழைய கட்டிடங்களை ஒதுக்கி வைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஆனால் நேபாளத்தில் நிலநடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. பொதுமக்களை உஷார்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தவில்லை என்றும் இதனால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top