கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு மாணவர்கள் உள்வாங்குவதற்கான விண்ணப்பப்பத்திரம் அடங்கிய கையேடு இன்று வெளியிடப்படவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை பல்கலைகழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக மாத்திரம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கையேட்டில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் உரிய முறையில் இணையத்தளம் ஊடாக மாணவர்கள் தமது விண்ணப்பத்தை அனுப்பிவைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், 30 ஆயிரத்து 500 மாணவர்களை பல்கலைக்கழங்களுக்கு உள்வாங்க எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.