3,821 Views
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள் தனமான கருத்துகளை அவ்வபோது கூறிவருவார் பவர் ஸ்டார் சீனிவாசன்
ஒரு நடிகரை உயர்த்தி பேசினால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அதை கிண்டலடித்து பேசுவார்கள். அதற்கு பதிலளித்து இந்த நடிகரின் ரசிகர்கள் ஸ்டேடஸ் போட என சமூக வலைதளங்களில் பவர் ஸ்டார் பெயர் உலா வரும். அதன்மூலம் பவருக்கு இலவச பப்ளிசிட்டி கிடைக்கும்.
எதை பற்றியெல்லாம் பேசினால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் என்று நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது, பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாதான். இந்த விருது வழங்கும் விழாவில் நடந்தவற்றை வைத்துதான், தற்போது பவர் ஸ்டார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, யார் அவார்டு வாங்குராங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்ன விசில் சத்தம் கேக்குதுங்கறதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, ரஜினி, அஜித் பெயரை அடுத்து இவருடைய பெயரை கூறியுள்ளார்.
புரியலையா… ரஜினி, அஜித்துக்கு அப்புறம் இவருடைய பெயர சொன்னாதா அதிக கைத்தட்டல் கேட்கிறதாம்…
=== CASTRO RAHUL ===