புதிய தேர்தல் திருத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்றிருந்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்தார்.
இதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.