இலங்கை வந்தார் ஜோன் கெரி
John Kerry arrives in Sri Lanka - இலங்கை வந்தார் ஜோன் கெரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் இன்று ஆரம்பித்தார்.
2005ம் ஆண்டு ராஜாங்க செயலாளர் கொலின் பவலின் விஜயத்தை அடுத்து, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் காணப்பட்ட உறவின் விரிசல்களை தணிக்கும் வகையிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு தினம் மாத்திரமே இலங்கையில் தங்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.