இவற்றில் 12 மே தின ஊர்வலமும் அடங்குகின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தின கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் கொழும்பு ஹைட் பார்க் திடலில் இடம்பெற்றது.
கொழும்பு , தாமரை தடாக அரங்கின் முன்னால் சுதந்திரக் கட்சியின் பிரதான பேரணி ஆரம்பமானது. பின்னர் பல்வேறு பகுதிகளில் ஒன்று கூடிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பிரதான பேரணியில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா உட்பட கொலன்னாவ மக்கள் கலந்துகொண்ட ஊர்வலமும் பிரதான பேரணியில் இணைந்துகொண்டது.