அன்னதான மையங்கள் பரிசோதனை
Dhansals around the island inspected - அன்னதான மையங்கள் பரிசோதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
விசாக பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அன்னதான மையங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக 6,361 அன்னதான மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி - பத்தேகமவை பிரதேசத்தில் மனித உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுகளை தயாரித்திருந்த 3 அன்னதான நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
உணவுப்பொருட் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் நீர் என்பன பாவனைக்கு உதவாக வகையில் இருந்தமையாலேயே இந்த தடை விதிக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அன்னதான மையங்களை பரிசோதிப்பதற்காக 1800 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பிலியந்தலை - பண்டாரகமவைச் சேர்ந்த உந்துருளி பழுதுபார்க்கும் சிறு வர்த்தகர் ஒருவர் நேற்று நாள் முழுவதும் வாகன சில்லுகளுக்கு இலவசமாக வளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இதுதவிர, மஹியங்கனை - குருவிட்ட பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் நேற்று மண்ணெண்னையை இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.