கோடம்பாக்கத்தில் இப்போது வரைக்கும் விடை உறுதியாகாத கேள்வி இதுதான் .ஏகப்பட்ட குழப்பங்கள் தீவிரமாய் பரப்பப்படும் வதந்திகள். ரஜினி என்பதால் ஊடகங்களும் இதை பரபரப்பான செய்தியாக மாற்றுகின்றன.
லிங்கா தோல்விப்படம் .இதுதான் ரஜினியை அடுத்த படத்தை தெரிவு செய்வதில் கொஞ்சம் பயத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணியுள்ளது . இந்த நேரத்தில்தான் ரஜினியின் அடுத்த படத்தை மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கபோவதாக செய்திகள் வெளியாகியது.
முதலில் ரஜினி ஒரு நகைச்சுவைப்படத்தில் நடிக்கபோவதாக செய்தி வந்தது பின்பு ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன்2 இல் நடிக்கபோவதகவும் கூறப்பட்டது .ஆனால் இப்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகின்றது . இந்த செய்தி எந்தளவு உண்மை என்பது இதுவரைக்கும் ரஜினி தரப்பால் உறுதி செய்யப்படவில்லை.
இது ரஜினிக்கு விரோதமான தரப்பால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்தி என்று பரபரப்பாக பேசப்பபடுகின்றது.
-கோடம்பாக்கக் குருவி-