6,936 Views
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள ‘வாலு’ படம், ரிலீஸ் திகதியை அறிவித்துவிட்டு பிறகு தள்ளிப்போடுவதில் கின்னஸ் சாதனை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2 வருடங்களில் சுமார் பத்து தடவைக்கு மேல் ரிலீஸ் திகதிஅறிவிக்கப்பட்டு, சொன்ன திகதியில் வாலு படம் வெளியாகவில்லை.
வாலு படம் கடைசியாக மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதோடு, மக்களை நம்ப வைப்பதற்காக மே 9ஆம் தேதி ரிலீஸ் என நாளிதழ்களில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வாலு ரிலீஸ். அதாவது மே 9 ஆம் தேதிக்கு பதில் மே 15 ஆம் தேதி வெளிவரும் என தகவல்.
என்ன காரணம்?
சிம்பு செய்த கால்ஷீட் விரயத்தினால் வாலு படத்தின் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகின.அதனால் பட்ஜெட் எகிற தயாரிப்பாளர் அநியாய வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார். அதன் காரணமாக ‘வாலு’ படம் மிக நீண்ட கால தயாரிப்பாக மாறியது.
குறிப்பிட்ட காலத்தில் படம் முடியாமல் போனதால் வட்டி அதிகரித்ததால் படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகமாகிவிட்டது.
அதை சரிசெய்வதற்காகக வாலு படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி விநியோகஸ்தர்களிடம் பேசிய விலையைவிட கூடுதல்விலை கேட்கிறாராம். (சிம்பு படத்தை பேசிய விலைக்கு வாங்குவதே பெரிய ரிஸ்க்…) இதில் கூடுதல் விலை வேறா என்று விநியோகஸ்தர்கள் ஓட்டம் எடுத்துவிட்டனர்.
அதனால் தான் மே 9 ஆம் திகதி வெளியாக வேண்டிய வாலு படம் மே 15 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம். மே 15 அன்று புறம்போக்கு, 36 வயதினிலே ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளி வருகின்றன.
அதே தினத்தில் வாலு வெளியானால் வாலு படத்துக்கு ஏதும் நடந்துவிடுமோ என்பதே தற்போதைய நிலை.
வெயிட்… வெயிட்…. இன்னும் கொஞ்ச நாளுக்கு தள்ளி போயிருக்கிறது வாலு. வாலு படம் மே 15 ஆம் தேதியிலிருந்து மே 22 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
மே 22 அன்று வடிவேலு நடித்த எலி படம் வெளிவரவிருக்கிறது.
ஒரே நாளில்… எலி….வாலு…..
செம பொருத்தம்தான்!
=== CASTRO RAHUL ===