பிறந்து சில நாட்களேயான 12 குழந்தைகள் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளது. அங்குள்ள வடகிழக்கு மாகாணத்தின் பன்சீர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்து இந்த குழந்தைகள் மரணித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அத்துடன் குறித்த மருத்துவமனையிலுள்ள மேலும் சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.