தல அஜித் நடிக்க ஆரம்பித்துள்ள தல 56 படத்தைப் பற்றி நாளுக்கு நாள், புதிய புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணமே உள்ளன. பலருக்கும் பிடித்தவர் பற்றி பரவலாக பேச யாருக்கு தான் பிடிக்காது? எனவே, நாங்களும் இப்போ ஒரு புது விஷத்தை உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
அதாவது, தலைப்பிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும். என்ன பேசப்போகிறோம் என்று! தலயின் புதிய படத்தில் விஷால் பாடிருக்காரா? அப்பிடி நடந்திருக்கா? தல சம்மதித்தாரா? இப்படி பலதரப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் ஏன் .. எங்களுக்குள்ளும் ஓடி மறைந்தது.
கவலைப்படாதீங்க, விஷயத்தை முழுசாப் படிங்க. அதாவது, தல 56 படத்துக்கான இசைப்பணியை நம்ம பையன் அனிருத் பொறுப்பேற்றுள்ளார். இது அனைவருக்குமே தெரியும். அஜித்தின் தகுதிக்கு ஏற்றாப் போல பாடல்களும் இசையும் அமைய வேண்டும். இல்லையென்றால், அனிருத் கதி அதோ கதியாகி விடும்.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக அனிருத் சமீபத்தில் ஒரு பாடலை பதிவு செய்துள்ளார். அந்தப் பாடலை ஹிந்தியின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான விஷால் தத்லாணி பாடியுள்ளார். இவர் ஏற்கனவே, கத்தி மற்றும் வணக்கம் சென்னை படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அப்பாடா, தலயின் தலை தப்பிச்சது என்று பலருக்கு நீலப் பெருமூச்சு வருவது புரிகிறது. இது வேற விஷால். நீங்க நினைச்சது நம்ம விஷால் ஓகேயா?
-கோடம்பாக்கக் குருவி-