"நோபல் பரிசை பெற்றுக்கொள்ள நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி மற்றும் துணை கண்டத்தில் வளர்ச்சியை யார் ஏற்படுத்துகிறார்களோ அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்” என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்வீட் செய்துள்ளார்.
அண்மையில் இந்திய பாகிஸ்தான் எல்லை பதற்றமும், விமானி அபிநந்தன் விடுவிப்பும் பாகிஸ்தான் பிரதமரை உயரத்தில் ஏற்றியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் பிரதமரின் அரிய செயலுக்கும், அதேபோன்று விமானி அபிநந்தனை கொண்டாடும், பாராட்டும், பெருமைப்படும் வகையில் ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.
அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து அதன்படி அவரை விடுதலையும் செய்தார். குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பதிவிடப்பட்டன.
இந்த நிலையில் நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்வீட் செய்துள்ளார்.