சீனாவின் தொலைக்காட்சி சேவையான சின்குவா செய்திச் சேவை, பெண் ரோபோ ஒன்றை உருவாக்கி செய்தி வாசிக்க வைத்துள்ளமை, தொழில் நுட்பத்தின் அதி உச்ச வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது.
குறித்த பெண் ரோபோ பீஜிங்கில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்து அசத்தியுள்ளது. இந்த ஒளிபரப்பை பார்த்த பலரும் நம்ப முடியாத அளவிற்கு தமது இன்ப அதிர்ச்சியை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்த தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்கள் .
குறித்த பெண் ரோபோவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு சின்குவா செய்தி சேவையும் சொகோவு எனும் தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. குறித்த பெண் ரோபோவுக்கு "சின் சியாமெங்" என பெயரிடப்பட்டுள்ளது. சின்குவா செய்தி சேவையின் செய்தி வாசிப்பாளர் கியூ மங் உருவத்தினை மாதிரியாக கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பெண் ரோபோவிற்கு மனிதர்களை போன்ற முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டதுடன், சிறிய காதணிகள், இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, முடி போன்றவை உள்ளிட்டவற்றை சாதாரண பெண் போன்றதொரு , இயல்பான அழகிய தோற்றத்தை கொண்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் ரோபோக்கள் இரண்டு செய்தி வாசிப்பாளர்களாக சீனாவின் உசென் பகுதியில் உள்ள செய்தித் சேவையில் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.