ஆணிய பிடுங்க வேண்டாம் எண்டு "பிரெண்ட்ஸ்" படத்தில் வடிவேல் சொல்லுற அதே வசனத்தை சீனாவில் ஒருவர் சொல்கிறாராம் ...இவர் அந்தப்படத்தை பார்த்து தான் அப்படி சொல்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு அவர் அந்த வசனத்தை பேசுவதற்கான காரணமே வேறு
ஆம் !!! சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அண்மையில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பெருந்தெருவின் நடுவே ஆணி போல் ஓர் வீடு ( NAIL HOUSE ) அகற்றப்பாடமலே உள்ளது ...இப்பாரிய நெடுஞ்சாலையின் நடுவே நிமிர்ந்திருக்கும் இவ்வீட்டில் இருந்து கொண்டு தான் குறித்த நபர் இப்படி பேசுகிறாராம்.. தனக்கு வழங்கப்பட வேண்டிய நட்ட ஈட்டினை வழங்காது போனால் தான் அவ்வீட்டில் இருந்து போகப்போவதில்லை என்றும் அவர் அடம்பிடிக்கின்றார் .ஏலவே குறித்த பாதையின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது

