Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
தன் வாழ்க்கை துணை தொடர்பில் விபரம் சொன்ன கங்கனா ரனாவத்

sooriyan gossip - தன் வாழ்க்கை துணை தொடர்பில் விபரம் சொன்ன கங்கனா ரனாவத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,099 Views
தன் வாழ்வில் தற்போது ஒரு காதலன் இருக்கிறார் என்று, தமிழ் மற்றும் ஹிந்தியில் அசத்தி வரும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணியின் கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில், ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்திருந்தார். அந்த படத்தின் இயக்குனரும் அவரே. மணிகர்ணிகா படத்தை, முன்னர் கிரிஷ் இயக்கி வந்தார். நடிகை கங்கனா ரனாவத் இந்த படத்தை இயக்க ஆரம்பித்ததும் கிரிஷுக்கும் அவருக்கும் பெரும் பிரச்சினையே உருவானது.

அந்த பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்ததையடுத்து, தனது அடுத்த படங்களில் கவனத்தை திருப்பி இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனை கங்கனா ரனாவத் முதலில் காதலித்து வந்தமை முன்னர் கிசுகிசுக்கப்பட்டமை பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே. அவருடன் டேட்டிங்கும் சென்றிருந்தார். ஒரு கட்டத்தில் தனது காதலை கங்கனா வெளிப்படையாக அறிவித்தபோது அதை ஹிருத்திக் ஏற்க மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே பெரிய பிரச்சினையே உருவாகி, ஹிருத்திக் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் முறைப்பாடும் செய்திருந்தார்.

திரைப்படங்களில் பெயர் எடுத்த கங்கனா ரனாவத், தன் காதல் விடயங்களிலும் பலரின் காதுகளில் கிசுகிசுக்கப்பட்டார். அவர் வாழ்வில் பெரிய அலையே அடித்து ஓய்ந்து இருக்கும் நிலையில், தற்போது புதிய காதலன் வந்து இருக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹிந்தி பத்திரிகைகள் இவரது அறிவிப்பு தொடர்பில் செய்திகளை வெளியிட்டு இருந்தன.

அந்த காதலன் யார் என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டநிலையில் கங்கனாவே பதில் அளித்துள்ளார். நான் என்றைக்குமே காதலைவிட்டு விலகி இருந்ததில்லை. கடந்த காலங்களில் பிரேக் அப், காதல் தோல்விகள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அதிலிருந்து நான் உடனே நகர்ந்து அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுவேன். தற்போதைக்கு காதலிக்கிறீர்களா என்கிறார்கள். என் வாழ்வில் தற்போது ஒரு காதலன் இருக்கிறார். டேட்டிங் செல்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதற்காக அல்ல, என் வாழ்வில் எனக்கு பொருத்தமான ஒரு நபர் இருக்க வேண்டும். அதன் மூலம் என் வாழ்வை நான் சரியாக வழி அமைத்துக் கொள்வேன்.

திருமணம் பற்றி கேட்கிறார்கள். நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். இந்தியாவில் ஒரு புறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை எனக்கு கவலை அளித்தாலும், எனக்கும் குழந்தை குடும்பம் வேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.

கடைசி வரை அந்த x நபர் தொடர்பில் கங்கனா ரனாவத் வாய் திறக்கவே இல்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top