ஜான்வி, ஏன் கேக்கை வாளால் கட் பண்ணினார் ?
sooriyan gossip - ஜான்வி, ஏன் கேக்கை வாளால் கட் பண்ணினார் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தனது பிறந்தநாள் கேக்கை கத்தியால் கட் பண்ணாமல் வாளால் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள், வைரல் ஆகி வருகின்றன.
நேற்று தன்னுடைய 22-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜான்வி, தன்னுடைய தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷியுடன் வாரணாசிக்குச் சென்றிருந்தார். மேலும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்றும் கங்கை ஆரத்தியைப் பார்க்கவேண்டும் என்றும் ஜான்வி தெரிவித்ததிற்கு இணங்க, கங்கை நதிக்கரையில் தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷியுடன் படகில் பயணம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் எளிமையாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஜான்வி, பிறந்தநாள் கேக்கை வாளைக் கொண்டு வெட்டி அசத்தியுள்ளார். இந்தநிலையில் ஜான்வி வாளால் கேக் கட் பண்ணும் படங்களை பலரும் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றார்கள்.
எவ்வாறு இருந்த போதிலும் ஜான்வி ஏன் கேக்கை வாளால் கட் பண்ணினார் என்ற ரகசியம் தெரியவில்லை.