Google நிறுவனம் இப்போது குழந்தைகள் பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றது.
பாலர் கல்வி என்று சொல்லப்படும் ஆரம்ப கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில், Google நிறுவனம் ' போலோ ' என்கிற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் குழந்தைகளுக்கான உச்சரிப்பு பயிற்சிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த புதிய செயலியை இந்தியாவின் உத்தரபிரதேச மாநில மாணவர்களிடம், சோதனை செய்ததில், அவர்களின் கற்கும் திறன் அதிகரித்துள்ளது என்றும், இதனால் கிராமப்புற மாணவர்களின் கற்றல் செயற்பாடு மேம்படும் என்றும், Googleளின் இந்தியக் கிளை நம்பிக்கை வெளியிட்டுள்ளது