எட்டு வயதான ஒரு பெண் பிள்ளைக்கு, அடிக்கடி தலைவலி ஏற்படவும் பெற்றோர் வழமையாக கொடுக்கும் தலைவலி மருந்துகளை கொடுத்து வந்துள்ளனர்.ஆனால் கொஞ்சமும் குறைவதில்லை, இதனால் மருத்துவரிடம் சென்றபோதுதான் ,பெரும் இடி ஒன்று அவர்கள் தலை மேல் விழுந்துள்ளது.
மூளை வீக்கமாக இருந்து ,அதனை பரிசோதித்த போது
மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்துள்ளன.
உடனடியா வீக்கத்தைக் குறைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் காரணமாக . 8 வயதிலேயே உடல் எடையானது 40 கிலோவிலிருந்து 60 கிலோவாக அதிகரித்துள்ளது. இதனால் நடக்க. மூச்சு விடக்கூட. இந்தக் குழந்தை சிரமப்பட்டுள்ளது.
இறுதியாக இது சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோய் இது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உரிய சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், மூளை நரம்பு மண்டலத்தை பரிசோதித்த போது தான், மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருந்துள்ளன. என்ன என பரிசோதித்த போது ..கொடுமை அவ்வளவும் நாடாப் புழுக்களின் முட்டைகள்.
நாடாப் புழுக்கள் கொடுத்த அழுத்தமானது, மூளையை பாதித்ததோடு மூளையின் செயல்பாட்டையும் நிறுத்திவிட்டது. அதற்காக முதலில் மூளையில், அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.எவ்வளவு வேதனையான நிலை.
முழுமையாக வேக வைக்கப்படாத உணவுகளைச் சாப்பிடுவது தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சரியாக வேக வைக்காத முட்டை, காய்கறிகள், முட்டைகோஸ், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகள் , மீன் போன்ற மாமிச உணவுகளையும் கட்டாயம் நன்கு வேகவைக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான புழுக்கள் இவற்றின் மூலமாகத் தான் இலகுவாக உற்பத்தியாகுமாம்.