திரையுலகின் முன்னணி நடிகராக தற்போது அடையாளப்படுத்தப்படும் நடிகர் அருண் விஜய் ஆவார். இவர் நடித்து வெளிவந்த தடம் திரைப்படம் விரைவில் தெலுங்கில் வெளிவரவுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. அருண் விஜய் நடித்துள்ள தடம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், அருண் விஜய்க்கான பட வாய்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
அருண் விஜய் நடித்து வெளிவந்த ''என்னை அறிந்தால்'', ''குற்றம் 23'' முதலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தடம் திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா கோப், யோகி பாபு, ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், வித்யா பிரதீப் உள்ளிட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் தெலுங்கிலும் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நடிகர் ராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரவந்தி ரவிகிஷோர், தாகூர் மது ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.