தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே விஜய்யுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்துவிட்டார்.
கடந்த சில நாட்களாக இவர் பொலிவூடில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்க இருக்கும் படத்தில் தான் அவருக்கு மனைவியாக கீர்த்தி நடிக்க இருக்கிறாராம்.
இந்த நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி தனது டுவிட்டர் பக்கத்தில், மகாநதி படத்தில் இருந்து உங்களை கவனித்து வருகிறேன், என்னுடைய அப்பாவின் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.