உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. நேற்று மியாமியில் நடந்த FIFA கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
குறித்த முடிவை FIFA தனது உத்தியோக பூர்வ Twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை இந்தியக் கால்பந்து சங்கம் நடத்த உள்ளது என FIFA தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் இதனை உறுதி செய்தார்.
இதனிடையே, 2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியமை குறிப்பிடத்தக்கது.