நடிகர்கள் தமக்கு பிடித்த விடயத்தை செய்வதில் மிகவும் அதிகமான நேரத்தை செலவு செய்கின்ற அதே நேரம் அந்த விடயங்களை அந்த விடயங்களை சமூக வலைத்தளங்களில் காணொளிகளாகவும் பதிவேற்றம் செய்கின்றார் .
இந்த நிலையில் நடுரோடு வரைக்கும் கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக பிற[பலாமா திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் திரைப்படத்தில் நடித்துவருகின்றார்
இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார்.ஹிந்தியில் தட்கா என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றார் ஸ்ரேயா.
சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை மெய்மறந்து ரசித்த இவர் . உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார்.
அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.