நியூசிலாந்தில் Semi-automatic , அசால்ட் (Assault )ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் மிகக் கொடூரமாக நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern ) துப்பாக்கிகளுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார். அத்துடன், 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து நியூசிலாந்து ராணுவத்தினர் பயன்படுத்தும் செமி ஆட்டோமேட்டிக், அசால்ட் ரக துப்பாக்கிகள், ராணுவத்தை தவிர யாரேனும் பயன்படுத்த முடியாத வகையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 11 திகதி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாகவும், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.