மார்ச் 20ம் திகதி, சர்வதேச மகிழ்ச்சி நாள் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், பேராசிரியர் சாண்டோஸ் மகிழ்ச்சிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளார். உலகில் உள்ள பலகோடி மக்கள், திருப்திகரமான மகிழ்ச்சையை அடைவது தற்போது கடினமாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சாண்டோஸ் தெரிவித்துள்ளார்.
இசைக்கலைஞர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து, தங்களை மேம்படுத்தி, வெற்றியடைவது போல, மகிழ்ச்சியை அடைவதற்கான பயிற்சிகளை எடுத்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவது அவசியம் என, பேராசிரியர் சாண்டோஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கான பல வழிமுறைகளையும் அவர் விளக்கியுள்ளார். முதலாவதாக, நன்றி தெரிவிக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்க வேண்டும். நன்றி உங்களுடைய வாழ்க்கையின் சந்தோஷத்தை அனுபவிக்க வழிவகுக்கிறது.
யாருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு வாரமும் நாம் எழுதி மனதார நன்றி தெரிவிக்க வேண்டும்.
இரண்டாவதாக, நல்ல தூக்கம் இருக்க வேண்டும். முடிந்தவரை இரவில் எட்டு மணிநேரம் தூங்க முயலுங்கள். ஒவ்வோர் இரவும், முழு வாரமும் எட்டு மணிநேரம் தூங்குவது மகிழ்ச்சிக்கான சிறந்த வழி.
தினமும் தியானம் செய்ய வேண்டும். அமைதியாக இருக்கும் 10 நிமிடங்களை இதற்காக ஒதுக்கவும். உங்கள் தொலைபேசியை தொலைவில் வையுங்கள். விறுவிறுப்பாக செயல்படுங்கள். சமூக வலைதங்கள் உங்களுக்கு போலி மகிழ்ச்சியை வழங்கலாம். அதனால் அடித்து செல்லப்படாமல் இருப்பது முக்கியமானது என்று சாண்டோஸ் தெரிவிக்கிறார்.
இத்தகைய செயல்பாடுகள் மகிழ்ச்சியை அடைந்து கொள்ள அனைத்து உதவிகளையும் வழங்கும் என, பேராசிரியர் சாண்டோஸ் குறிப்பிட்டுள்ளார்.