விண்ணுலகம் குறித்த ஆய்வின் போது, புதிதாக 4000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் புதிய கண்டறியப்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, விண்ணுலகம் குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து வந்த நிலையில், இந்த புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த 4000 கோள்களும், சூரிய மண்டலத்திற்கு வெளியே இருப்பதை, ஐரோப்பிய நிறுவனம் உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.