சிறு சிறு வேடங்களில் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவகக் காற்று படம் மூலம் நாயகனானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகன் ஆன பின்னும் பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்த 10 ஆண்டுகளில் 28 படங்களில் நடித்துள்ளார் இன்னும் 18 படங்கள் அவர் கைவசம் உள்ளது. இந்த ஆண்டு அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி.
இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: நிறைய பேர் நிறைய படங்கள் நடிக்கிறார்கள். ஆனால் நான் மட்டுமே நடிப்பதாக செய்திகள் வருகிறது. தினமும் நிறைய கதைகள் கேட்கிறேன். பிடித்த கதைகளில் நடிக்கிறேன். ஆனால் காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். அதுதான் பட்டியல் நீளமாக இருக்கிறது. பெரும்பாலும் கதை கேட்பதை தவிர்க்கிறேன். கதை பிடிக்கவில்லை என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது.
பிடித்திருக்கிறது என்று சொன்னால் நடியுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள், பிடிக்கவில்லை என்று சொன்னால் பிடிக்வைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு பணமோ, படங்களின் எண்ணிக்கையோ முக்கியமில்லை. நல்ல படங்களில் நடித்து மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். என்கிறார் விஜய் சேதுபதி.