ஆஸ்திரேலியாவில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு பொறியாளர், அடிக்கடி துர்நாற்றம் வீசும் வாயுவை வெளியிட்டதாகவும், இதனால் தான் மிகவும் கொடுமை அனுபவிப்பதாகவும், மேற்பார்வையாளர் ஒருவர், தனக்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம் ,அந்த நபர் செய்தது ,வம்புக்கு இழுக்கும் செயலல்ல எனவும்,வாயு காரணமாக, மேற்பார்வையாளர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தெரிவித்துள்ளது.
மேற்பார்வையாளர் மேலும் கூறியதாவது "நான் வேலை செய்யும் அறை மிகவும் சிறியது. மேலும் ஜன்னல்கள் இல்லை.எனது அறைக்குள் வரும் பொறியியலாளர் ஒருநாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவையாவது வாயுவை வெளியேற்றுகிறார், 'திரு. துர்நாற்ற மனிதன் இவர்" என்றும் கூறியுள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த பொறியியலாளர்,"அலுவலகத்தை விட்டு தன்னை துரத்த வேண்டுமென்பதற்காகவே, இப்படியொரு சதிச் செயலில் ஈடுபட்டுள்ளார் இந்த மேற்பார்வையாளர்"எனக் கூறியுள்ளார்.
நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.தீர்ப்பை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்கள் காவல் இருக்கின்றன.ஏனெனில் மிகவும் வித்தியாசமான வழக்கு இது என்பதால்.