தன்னை பகடைக்காயாக மோடி அரசாங்கம் பயன்படுத்துவதாக தான் முன்னர் கூறியது நிரூபணமாகிவிட்டது என்று, விஜய் மல்லையா tweet செய்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில், “விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக,14 ஆயிரம் கோடி இந்திய மதிப்புள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார். இதைக் கோடிட்டு காட்டியுள்ள விஜய் மல்லையா தனது twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
நான் செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன்மூலம், மோடி அரசு தன்னை பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் ஏற்கனவே கூறியது நிரூபணமாகி விட்டது. முழுமையாக கடன்களை திரும்ப பெற்று விட்டதாக உயர்ந்த அதிகாரம் படைத்தவரே சொன்ன பிறகும், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் ஏன் இன்னும் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார்