இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, உடன் கைது செய்யப்பட்ட வேண்டும் என, பல திருநங்கைகள் ஒன்றிணைந்து வலியுறுத்தல் விடுத்துள்ளனர். அத்துடன், விஜய் சேதுபதியை கைது செய்ய தம்முடன் இணைந்து அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்தில் பல ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருந்த போதிலும், குறித்த படத்தில் தனது பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணமுள்ளன.
இந்த படத்தில் உள்ள ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் ஒன்று வருகிறது.
இதற்கு தமிழகத்தில் உள்ள பல திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், விஜய் சேதுபதியை கண்டித்தும், அவரை விரைவாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், சமூக வலைத்தளங்களில் திருநங்கைகள் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.