தமிழகத்தின் திருமங்கலம் பகுதியில், மிகவும் சூட்சுமமான முறையில், சப்பாத்தியைக் கொண்டு விநியோகிக்கப்பட்ட பணத்தை கண்டுபிடித்த பெண் காவல்துறை அதிகாரியைப் பற்றிய செய்தியொன்று தீயாக பரவி வருகின்றது.
சப்பாத்தி மாவில் 500 ரூபாய் நாணயத்தாள், மற்றும் 2000 ரூபாய் நாணயத்தாளை மறைத்து வைத்து, அதை வாக்காளர்களுக்கு விநியோகித்து வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில அரசியல்வாதிகளால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக தனியானதொரு குழுவினர் விநியோக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த வினோத முறையை கர்நாடகாவை சேர்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவர் இனங்கண்டு, அதனை காணொளியாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, குறித்த பெண் அதிகாரி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதனை அடுத்து, அந்த துணிகரமான பெண் அதிகாரிக்கு சமூக வலைத்தளங்களில் பல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.