கடன் பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை செலுத்த முடியாத நிலையில் திண்டாடும் பலரை நாம் அவதானித்துக் கொண்டேதான் இருக்கின்றோம். சிலர் கடன் வேண்டுவதே ஒரு வேலையாக வைத்திருப்பார்கள். மேலும் சிலர் அவசரமாக பெறும் கடன்களை உரிய நேரத்தில் செலுத்தாமல் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றி வாழ்ந்தும் வருகின்றார்கள்.
உண்மையில் கடன் பெறுவதால் மனசில் சுமை அதிகரிப்பது இயல்பு. எப்படி தாம் பெற்ற மொத்த பணத்தையும் செலுத்த போகிறோம்? என்ற கேள்வி, பயத்தில் ஒருவித மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றார்கள். கடன் வாங்குவதால் ஏற்படும் மனச்சுமை தொடர்பில் சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வொன்றை மேற்கொண்டார்கள்.
இதன்போது குறிப்பிட்ட ஒரு தொண்டு அமைப்பு, பரிசோதனைக்காக, சிலரது கடன்களை அடைக்க நிதி உதவி வழங்கி இருக்கிறது. அப்படி உடனே கடன்களை அடைத்தவர்களுக்கு, ஆராய்ச்சியாளர்கள் சில சோதனைகளைத் வைத்துள்ளார்கள். குறித்த சோதனைகளின் பிரகாரம், கடன் அடைத்தவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரித்திருப்பதும், சுயகட்டுப்பாடு கூடியிருப்பதும், எதிர்காலத்திற்காக திட்டமிடும் உந்துதல் கூடியிருப்பதும் தெரிய வந்தது.
குறித்த மக்கள் கடன் செலுத்தாமல் இருந்தபோது இருந்த மன உழைச்சல் கடன் செலுத்திய பின்னர் அவர்களிடத்தில் இல்லை என்று, குறித்த ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.